ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 மார்ச் 18 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி, கதவடைப்புப் போராட்டத்துக்கும் நீதிக்கான மாபெரும் மக்கள் பேரெழுச்சிக்கு வருமாறும் அழைப்பு விடுத்து, மட்டக்களப்பு மாவட்டமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் அமைப்பின் பேரில், இந்தச் சுவரொட்டிகள் உரிமை கோரப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு - கல்லடிப் பாலத்திலிருந்து நாளை (19) காலை 10 மணிக்கு பேரெழுச்சி ஆரம்பமாகும் என்று, சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “கால அவகாசம் வேண்டாம்; சர்வதேச விசாரணை வேண்டும்”, “விடயத்தை, ஐ.நா பொதுச் சபைக்குப் பாரப்படுத்த வேண்டும்”, “காணாமல் போனோருக்கான அலுவலகம் வேண்டாம்” ஆகிய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, இப்போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
15 minute ago
27 minute ago
32 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
32 minute ago
40 minute ago