Princiya Dixci / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, அரசடி தனியார் வைத்தியசாலைக்க முன்பாக அமைக்கப்பட்டிருந்த வாகன தரிப்பிடம் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக மக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து, மாநகர சபையால் அகற்றப்பட்டுள்ளது.
இந்த வாகன தரிப்பிடம், அரசடி தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக 20 ஆண்டுகளாக இயங்கி வந்த ஓட்டோ தரிப்பிடத்துக்கு அருகாமையில் மாநகர சபையால் குத்தகை அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்படடிருந்தது.
இவ்வாறு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த இந்த வாகன தரிப்பிடத்தால் தனியார் வைத்தியசாலைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஓட்டோ தரிப்பிடத்துக்கும் தொடர்ச்சியாக இடையூறாக இருப்பதாகவும், ஓட்டோகள் அதன் தரிப்பிடத்தில் நிறுத்தமுடியாமல் வேறு இடங்களில் நிறுத்தவேண்டி ஏற்படுவதால் வாகன விபத்து அபாயம் நிலவுவதாகவும் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியிலாளர் என்.சசினந்தன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைக்கமைவாக, மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான் மக்கள் நலன் செயற்பாடாக இவ்வாகனத் தரிப்பிடத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் அவ்விடத்திலிருந்து அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .