Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான், அப்துல்சலாம் யாசீம்
கிழக்கு மாகாணத்தில் நேற்றையதினம் (6) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீர் சுற்றிவளைப்பு சோதனையை மேற்கொண்டனர்.
இதன்போது, வியாபாரிகள் பதுக்கி வைத்திருந்த, தகரத்தில் அடைக்கப்பட்ட டின்மீன், பருப்பு ஆகிய பொருள்களை வியாபாரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டு விலைகளில் டின்மீன் ஒன்று 100 ரூபாய்க்கும், பருப்பு 1 கி.கி. 65 ரூபாய்க்கும் பறிமுதல் செய்த அனைத்துப் பொருள்களும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழ் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப். அன்வர் சதாத் தலைமையில், எம்.எம்.எம். றம்சீன், என்.ஏ. மாஜித், எம்.யூ.எம்.பசீர் ஆகிய புலனாய்வு உத்தியோகத்தர்களால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சுற்றிவளைப்பு, மட்டக்களப்பு நகரம், காத்தான்குடி, ஆரையம்பதி, செட்டிப்பாளையம், களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை, கல்லாறு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த சுற்றிவளைப்பின் போது மேலும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்தை மீறிய பல வியாபாரிகளுக்கு எதிராக வழக்குகளும் பதியப்பட்டன.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதில் வியாபாரிகள் பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக, கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப். அன்வர் சதாத் தெரிவித்தார்.
அத்தோடு, எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதுக்கல் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள், அதேபோன்று பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் ஆகியோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத்தால் விலைக்குறைப்புச் செய்யப்பட்ட பருப்பு, டின்மீன் ஆகியவற்றை மக்களுக்கு விற்பனை செய்யாமல் பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக, திருகோணமலை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் தெரிவித்தார்.
27 minute ago
32 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
33 minute ago