2025 மே 23, வெள்ளிக்கிழமை

போதைப்பொருளை ஒழிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை, போதைப்பொருள் விற்பனையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை சமுதாய சீர்திருத்த திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

 

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், காத்தான்குடியில் கரையோரப் பிரசேதங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு விழிப்பூட்டும் வேலைத்திட்டம், இன்று (14) இடம்பெற்றது.

சமுதாய சீர்திருத்த திணைக்கத்தின் காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.றசூல்சாவின் ஏற்பாட்டில், சமுதாய சீர்திருத்த திணைக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர் கே.சுதர்சன் தலைமையிலான சமுதாய சீர்திருத்த திணைக்கத்தின் உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர், இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது காத்தான்குடி, வாவிக்கரையை அண்மித்து வாழும் வீடுகளுக்குச் சென்று போதைப்பொருள் பாவனையாளர்கள், விற்பனையாளர்களை அடையாளப்படுத்தும் முறை குறித்து எடுத்துக் கூறினர்.

மேலும், இவ்வாறான போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை அடையாளம் கண்டால் காத்தான்குடி பொலிஸ் நிலையம் (0652245595) மதுவரித்திணைக்களம் (0652222924) காத்தான்குடி பிரதேச செயலகம் (0652245048) சமுதயா சீர்திருத்த திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலகம் (0652228196) ஆகிய அலுவலகங்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X