Gavitha / 2016 ஜூன் 07 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹூஸைன்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திங்கட்கிழமை (06) இடம்பெற்ற விபத்தில், இளைஞனொருவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் மற்றுமொரு இளைஞன் படுகாயங்களுக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 6 நண்பர்கள், மோட்டார் சைக்களில் யாழ்ப்பாணத்துக்கு சவாரி சென்று விட்டு, திக்கோட்டை கிராமத்துக்கு வீடு திரும்பியுள்ளனர். அதிவேகத்துடன் வந்துக்கொண்டிருந்த நண்பர்களில், முந்திச் சென்ற இருவர் தங்களது வீட்டருகில் இறங்கி, மற்றைய நண்பர்களுக்கு கையசைக்க காத்திருந்த போது, அதிவேகத்துடன் வந்த நண்பர்களின் மோட்டார் சைக்கிளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இதன்போது, சதுர்ஜன் என்ற இளைஞன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடன் நின்றிருந்த மற்றைய நண்பர், அந்தரங்க உறுப்பில் சிதைவு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
46 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
4 hours ago