2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மாணவன் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 மே 27 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,பேரின்பராஜா சபேஷ்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவன் ஒருவன் தாக்கப்பட்டமையைக் கண்டித்து அப்பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த மாணவன் தனது பேஸ்புக்கில் முள்ளிவாய்க்கால் நினைவுதின புகைப்படம் ஒன்றைத் தரவேற்றம் செய்தமையைக் கண்டித்து குறித்த மாணவன் பெரும்பான்மையின மாணவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் பொலிஸார் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரைகாலமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட  வேண்டும் என்றும் ஆர்ப்பாட்;டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்ட இடத்துக்கு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இதன் பின்பு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், 'கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆட்சியாளர் காலத்திலிருந்து தற்போதுவரை இவ்வாறான கெடுபிடிகள் தமிழ் மாணவர்களுக்கு எதிரான மிலேச்சல் தனமான தாக்குதல் என்பன நிறுத்தப்படமால் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதை மக்கள் பிரதிநிதிகளாக நாங்கள் அனுமதிக்க முடியாது. பல்கலைக்கழகத்தில் இவ்வாறான தாக்குதல் உள்ளிட்டவை தொடர்பாக நாடாளுமன்றம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு போன்றவற்றுடன் கலந்துரையாடி எதிர்காலங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X