Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Sudharshini / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா,ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பாடசாலைகளில் கல்விகற்கும் பிள்ளைகளை, ஆசிரியர்கள் தமது பிள்ளைகளாக நினைத்துக் கல்விச் சேவை வழங்குவது ஒவ்வொரு ஆசிரியர்களினதும் கட்டாயக் கடமையாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூரில் உள்ள பாடசாலைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'எங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த பணியை சரியாகச் செய்கின்றபோதுதான் மக்கள் திருப்தியடைவார்கள். அதேபோன்று மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டிய தேவை அதிபர், ஆசிரியர்களுக்கு இருக்கிறது. மாணவர்கள் தாய் தந்தையருடன் இருப்பதனைவிட அதிக நேரம் பாடசாலைகளிலேயே செலவிடுகின்றனர்.
நாம் அனைவரும் மரணிக்கப் பிறந்தவர்கள். இவ்வுலகில் வாழும் சொற்ப காலத்தில் நாம் என்ன செய்தோம் என்பதனை சிந்திப்பதுடன் என்ன செய்திருக்கிறோம் என்றும் சிந்திக்க வேண்டும்
ஏனைய மொழிகளுக்கும் முன்னுரிமை வழங்கி கற்பிக்க வேண்டும் என்றும் ஒரு நாளைக்கு மூன்று சொற்கள் படிக்கும் ஒரு மாணவன் பாடசாலையை விட்டு வெளியாகும் போது சுமார் ஒன்பது அல்லது பத்தாயிரம் சொற்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.
எனவே, ஆங்கில மொழிக்கும் சந்தர்ப்பம் வழங்கி அம்மொழியையும் கற்றுக்கொள்ள மாணவர்களும் தங்களைத் தயார்படுத்த வேண்டும்' என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், ஏறாவூர் அறபா வித்தியாலயத்திற்கு கணினியும் ஏறாவூர், ஷாஹிர் மௌலானா வித்தியாலயத்திற்கு போட்டோக்கொப்பி இயந்திரமும் ஏறாவூர் அல்-முனீறா பாலிகா மகாவித்தியாலயத்திற்கு முச்சக்கரவண்டி மற்றும் தளபாடங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago