Princiya Dixci / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில், ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம், எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண முதலமைச்சின் நிர்வாகப் பிரிவில் இன்று (14) காலை 10.30 மணியளவில் ஏற்பட்டுள்ள மின்னொழுக்குக் காரணத்தினால் பாரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று, முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வழமைபோன்று காரியாலய வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது நிர்வாக பிரிவில் பொருத்தப்பட்டிந்த குளிர்பதனப்படுத்தலில் (AC) தீப்பிடித்துள்ளதால் அங்கு கடமையிலிருந்த உத்தியோகத்தர்கள் தீயினை அனைக்க மேற்கொண்ட முயற்சியின் பலனால் ஏற்படவிருந்த பாரிய விபத்துக்களைத் தடுத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த தீ விபத்தினால் ஆவணங்கள் சிறிதளவு தீப்பிடித்துள்ளதாகவும் குளிர்பதனப்படுத்தல் உட்பட ஆவணங்கள் சேகரித்து வைத்திருந்த அலுமாரி மற்றும் ஜன்னல்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago