2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

முதலமைச்சர் கிடைத்தது கிழக்கு மக்களின் வரப் பிரசாதமே

Niroshini   / 2017 மார்ச் 04 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

கிழக்கு மாகாண முதலமைச்சரினால் முன்வைக்கப்படும் பிரச்சி​னைகள் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை தீர்த்து வைப்பதற்கு அவர்கள் தயாராகவுள்ளதாக, சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

ஏறாவூர் மர்ஹும்  செய்னுலாப்தீன் வாவிக்கரை  பூங்காவினை திறந்து வைக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“கிழக்கு மக்களுடைய பிரச்சினைகளை மிகத் தௌிவாக அறிந்து,  அதற்குரிய தீர்வுக்கான வழிகளையும் யோசித்தே  சம்பந்தப்பட்டவர்களை அணுகி குறித்த பிரச்சினைகளை இலகுவாக தீர்க்கக் கூடிய திறன் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு உள்ளது. 

தற்போது கிழக்கில் வேலையில்லாப் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அது தொடர்பாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதமருடன் கலந்துரையாடியதையடுத்து. தற்போது கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்க​ளை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அது தொடர்பான கூட்டமொன்று எதிர்வரும் சில தினங்களில் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திறைசேரியில் நடைபெறவுள்ளதுடன்,  இதன் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது” எனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X