2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மார்ச் 12 பேரணி; நாளை ஆரம்பம்

Princiya Dixci   / 2017 மார்ச் 12 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

நாட்டின் அரசியல் காலாசாரத்தினை மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட மார்ச் 12 இயக்கத்தின் தேசிய பேரணி, நாளை 13ஆம் திகதி ஆரம்பமாகி, நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் சென்று விழிப்புணர்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இன்றையதினம், கம்பஹா மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் தொடரணியாக முன்னெடுக்கப்பட்டும் இப் பேரணி, எதிர்வரும் 24ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அம் மாவட்ட அரசாங்க அதிபர்களின் தலைமையின் கீழ், மாவட்ட ரீதியாகக் குழுக்களை அமைத்து, இது தொடர்பான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

இதன்கமைய, மட்டக்களப்பு மாவட்ட மட்ட ஆலோசனைக் கூட்டங்களும் நாளை முதல் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளன.

முதலாவது கூட்டம், மண்முனை வடக்கு பிரதேச செயலக டேர்பா மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ளது. நாளை மறுதினம் (14), மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலும், அதனையடுத்து ஏறாவூர் பற்று, கோரளைப்பற்று தெற்குப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடைபெறவுள்ளன.

பொலநறுவை மாவட்டத்திலிருந்து வரும் பேரணி, மட்டக்களப்பு - நாவலடி பிரதேசத்தில் வரவேற்கப்பட்டு, திருமலை வீதியால் அழைத்துவரப்பட்டு, மட்டக்களப்பு நகரில் கூட்டம் நடத்தப்பட்டு, மீண்டும் பெரியகல்லாறுவரை சென்று அம்பாறை மாவட்டத்துக்குச் செல்லவுள்ளது.

மார்ச் 12 இயக்கத்தின் பங்குதாரர்களாக சர்வோதயா, பவ்ரல், ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நஷனல்,  இலங்கை உள்ளூராட்சி உறுப்பினர்களின் மன்றம், சனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கான அமைப்பு, ரைற்ஸ் நவ் மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு,  இலங்கை வர்த்தக சம்மேளனம், இலங்கை தாதியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம்,  செடெக் நிறுவனம், தாய் மண்ணில் அன்னையரும் புதல்வியரும் அமைப்பு, இலங்கை இளைஞர் முஸ்லிம் சங்க சம்மேளனம், இலங்கை உள்ளூராட்சி சம்மேளனம், அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேரும் இதனுடன் இணைந்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .