Suganthini Ratnam / 2016 மே 26 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கல்வி சாரா ஊழியர்களின் பதவி உயர்வு தொடர்பான கோரிக்கை, மகாசபை பொதுக்கூட்டத்தில் முன்வைக்கப்படும் என இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
இலங்கை கல்வி சாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் 13ஆவது மகாசபைக் கூட்டத்தை முதன்முறையாக இவ்வருடம் கிழக்கு மாகாணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மறுதினம் சனிக்கிழமை ஏறாவூர் அல்-ஜுப்ரியா வித்தியாலயத்தில் காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கல்வி சாரா ஊழியர்களின் நூலகப் பணியாளர், ஆய்வுகூட உதவியாளர்கள் மற்றும் ஏனைய பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொள்ளல். அரச விடுமுறை தினங்களில் கடமை புரிந்தால், நாள் சம்பளத்தைப் பெறல், 02ஃ 2013 சுற்றுநிரூபத்துக்கு அமைய தற்காலிகமாக கடமையாற்றிய காலத்தை சேவையினுள் உள்வாங்கச் செய்வதற்கு சம்பளத்திலிருந்து எட்டு சதவீதத்தை மீளச் செலுத்தினால், மொத்த சேவைக் காலத்தில் உள்வாங்கப்படுதல், காவல் உத்தியோகஸ்தர்களுக்கான 67 வருட பழைய அநீதியான சுற்றுநிரூபத்தை தற்காலத்தில் செயற்படுத்துவதை தவிர்த்து ஒன்பது மணித்தியால காவல் சேவையை வென்றெடுக்கும் போராட்டத்தைச் செயற்படுத்தல் போன்ற ஏனைய விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன எனவும் அவர் கூறினார்.
இலங்கை கல்வி சாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தில் நாடளாவிய ரீதியாக சுமார் 4,800 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்டோரும் அங்கத்தவர்களாக உள்ளார்கள்.
இம்மகா சபைக் கூட்டத்துக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், இலங்கை கல்வி சாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் கே.பி.ஏ.கே.கருணாசேகர, மகாசபை உறுப்பினர்கள்; மற்றும் கல்வி அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
16 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago