2025 மே 08, வியாழக்கிழமை

மகரிஷியின் 136 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா

Kogilavani   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

ஸ்ரீ ரமண மகரிஷி இலங்கை கிளையினரால் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷpயின் 136 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(27) மட்டக்களப்பு ஏறாவூர் வரசித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக இலங்கை கிளையின் ஸ்ரீ ரமண மகரிஷp அறப்பணி மன்றத் தலைவர் மா.செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

முன்னாள் இளைஞர்; சேவை உதவிப் பணிப்பாளர் த.ஈஸ்வரராஜா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக தமிழத் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான ஞா.சிறிநேசன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான க.கோடிஸ்வரன், சிறப்பு விருந்தினர்;களாக  கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி கலாநிதி க.இராஜேந்திரம் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகஸ்த்தர் கி.குணநாயகம் மற்றும்  ஸ்ரீ கணேச காளிகா ஆலய பரிபாலன சபைத் தலைவர் பொ.கஜேந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X