வடிவேல் சக்திவேல் / 2017 நவம்பர் 21 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகம், மக்களின் நலனைக் கருதி, குறுந்தகவல் சேவையொன்றை வழங்கிவருகின்றது.
இதனுடாக, மட்டக்களப்பு பிராந்தியத்தில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக ஏற்படும் நீர்த்துண்டிப்பு, நீர் கட்டண விவரம், அதனுடன் தொடர்புபட்ட இதர தகவல்களை தங்களின் அலைபேசிகள் மூலம் உடனுக்குடன் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியுமென, பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி.ஏ. பிரகாஷ் தெரிவித்தார்.
இச்சேவையை, அலைபேசியில் செயற்படுத்த F <இடைவெளி> @battiwater என டைப் செய்து 40404 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவலை அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. (உ+ம்: F @battiwater)
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago