Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழியங்கும் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கரையோர வலய முகாமைத்துவ திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு வாவியின் எல்லையிடல் சம்பந்தமான கருத்தரங்கு, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் எம்.கோபலரெத்தினம் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
எல்லைப் பிரச்சினை மட்டக்களப்பு வாவியின் சுற்றாடல் நிலைமை, கரையோரம் பேணல், கரையோர முகாமைத்துவம், கண்டல் தாவரங்கள், கண்டல் சூழல் விடயங்கள், கண்டல் சூழல் விலங்கினங்களை பாதுகாத்தல், கண்டல் சமூகத்தை பாதுகாத்தல், போன்ற பல விடயங்கள் தெளிவாக இதன்போது ஆராயப்பட்டன.
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கல் திணைக்களத்தின், மாவட்ட செயற்றிட்ட, இணைப்பாளர் எ.கோகுலதீபன் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago