Princiya Dixci / 2016 ஜூன் 08 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, த.தவக்குமார், வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம சேவையாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் கிராம சேவையாளரகள் தங்களது கடமையினை அச்சமின்றி மேற்கொள்வதற்கான நிலையினை ஏற்படுத்துமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்ட கிராம சேவையாளர்கள், இன்று புதன்கிழமை (08) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம் விடுத்த அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளங்களிலும் இன்று, கடமைக்கு வந்த கிராம சேவையாளர்களே கறுப்புப்பட்டி அணிந்து இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஞானசிறி தலைமையில் இது இடம்பெற்றது.
கிராம சேவையாளர்கள் கடமையாற்றும்போது சீருடை தரித்தவர்கள் அதில் தலையிடுவது, சிவில் நடவடிக்கைகளைக் குழப்பும் நடவடிக்கையென இதன்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கிரானில் இராணுவத்தினரால் கிராம சேவையாளர் ஒருவர் தாக்கப்பட்டு அவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் நிலையில் தாக்கியதாகக் கைதுசெய்யப்பட்ட இராணுவத்தினர் விடுதலைபெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.
48 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
4 hours ago