Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மீன்குஞ்சுகளை உற்பத்திசெய்யும் தொழிற்சாலையொன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள அதேவேளை, மாவட்டத்திலுள்ள 16 சிறிய குளங்கள் மற்றும் வாய்க்கால்கள்; புனரமைப்பு, சிறுதானிய விதை விநியோகம் ஆகியன 157.6 மில்லியன் ரூபாய் செலவில் ஐக்கிய நாடுகளின் உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டத்தில், உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டத்தின் கீழேயே இவையும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது தொடர்பான மீளாய்வுக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே, மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சோதயன்குளம், அத்திக்காட்டுக்குளம், இலுப்பைக்குளம், குறுக்கானமடுக்குளம், நவுண்டல்யமடுக்குளம், தரணிக்குளம், தரவைக்குளம், மியான்கல்குளம், கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கிரிமிச்சையோடைக்குளம், ஆனைகட்ட காட்டுக்குளம் ஆகியன புனரமைக்கப்படவுள்ளன.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அத்தியான்டமுன்மாரிக்குளம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பழுகாமம் பிரதான வாய்க்கால், புழுக்குணாவை அணைக்கட்டு வாய்க்கால், கடுக்காமுனைக்குளம், மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மகிழூர்முனைக்குளம் மற்றும் வாய்க்கால், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடைச்சகல்குளம் ஆகியனவும் புனரமைக்கப்படவுள்ளன.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பிஎஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் திட்ட முகாமையாளர் திருமதி ரோகினி சிங்கராஜா, ஆலோசகரும் விவசாய அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான கலாநிதி டி.பி.ரி.விஜயரெட்ண, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
4 hours ago
5 hours ago
9 hours ago