Suganthini Ratnam / 2017 மே 18 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள விசேட அபிவிருத்தித் திட்டத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று நடைபெற்றது.
இந்த அபிவிருத்தித் திட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தித் திட்டம் அனுசரணை வழங்குகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு துறைகளையும் அபிவிருத்தி செய்து, 2021ஆம் ஆண்டு முழுமையாக அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றும் வகையில் இந்த ஐந்தாண்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்திலுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி உச்சப் பயனை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில், இந்த அபிவிருத்தித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி, விவசாயம், சுகாதாரம், கல்வி, சிறுகைத்தொழில், பாரம்பரிய கைத்தொழில், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி, வீதி, உள்ளூர் கட்டமைப்பு, தொழிற்பயிற்சி, உயர் கல்வி வளர்ச்சி, மக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்களைக் கட்டியெழுப்புதல், வாழ்வாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என மேற்படி நிகழ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹா, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஜோன் ஹொரிசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
15 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
35 minute ago