Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 19 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 'சிரம சக்தி' எனும் அபிவிருத்தி வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாக நிறைவு பெற்றுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி திருமதி ஏ.நிசாந்தி அருள்மொழி தெரிவித்தார்.
சிரம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவில் புனரமைக்கப்பட்ட மன்சூர் வீதியை இன்று செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கும் நிகழ்வின்போதே, அவர் இதனைக் கூறினார்.
'சிரம சக்தி' எனும் வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 28 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் ஒவ்வொரு திட்டத்துக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஒரு இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்ட நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வீதிகள், வடிகான்கள், மையவாடிகள், சிறிய மதகுகள், இளைஞர் வள நிலையங்கள் புனரமைப்பு உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
காத்தான்குடி, கிரான், ஏறாவூர்ப்பற்று, ஆரையம்பதி, கோறளைப்பற்று மத்தி, வவுணதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏற்கெனவே இந்தத் திட்டங்கள் பூர்த்தியாக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago