2025 மே 07, புதன்கிழமை

மட்டக்களப்பில் 1,811 பேர் குடும்பக் கட்டுப்பாடு

Niroshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1,811 பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி,கடந்த  2011ஆம் ஆண்டு 379பேரும் 2012ஆம் ஆண்டு 606 பேரும் 2013ஆம் ஆண்டு 343 பேரும் 2014ஆம் ஆண்டு 483 பேரும் குடும்பக்கட்டுப்பாடு செய்துள்ளதாக அவ்அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வைத்தியசாலையில் பிரசவத்தின் போது ஏற்படும் மரணங்கள் குறைவடைந்துள்ளதாகவும் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு தாய்மார்கள் மாத்திரமே பிரசவத்தின்போது மரணமாகியுள்ளதாகவும் 2012ஆம் ஆண்டிலேயே இம்மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X