2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் 534 பொலிஸாருக்கு இடமாற்றம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 23 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஐந்து வருட சேவை இடமாற்றத்தின் அடிப்படையில் மட்டக்களப்பிலிருந்து 534 பொலிஸாருக்கு நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணாநாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரம், ஏறாவூர், வாழைச்சேனை, காத்தான்குடி உட்பட  மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய மேற்படி பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ஆண், பெண் அதிகாரிகளான பிரதான பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் சார்ஜன்ட்;, பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வரை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இம்மாத ஆரம்பத்தில் இந்த இடமாற்றத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த இடமாற்றம் ஜனவரி 16ஆம் திகதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டு  திங்கட்கிழமையுடன் (23) பூர்த்தி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, நாட்டின் ஏனைய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய 534 பொலிஸார் மட்டக்களப்புக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X