Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Freelancer / 2021 ஜூலை 20 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அத்துடன், சிறுவர்களுக்கு எதிரான 63 வன்முறைச் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான 1,513 குடும்ப வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் கடந்த மாதம் 31ஆ ம் திகதிவரையிலான 6 மாதங்களில் மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக முயற்சி, சிறுவர்கடத்தல் போன்ற 31 பெருங்குற்றங்களும், 32 சிறுகுற்றங்களுமாக 63 குற்றங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதேவேளை, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக ஆகக்கூடியதாக ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 322 முறைப்பாடுகளும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 186 முறைப்பாடுகளும் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 160 முறைப்பாடுகளுமாக 1,513 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன், பெண்களுக்கு எதிராக 7 பெருங்குற்றங்களும் 71 சிறுகுற்றங்களும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிறுவர்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை சம்பவங்கள் இந்த கொரோனா காலத்திலும் கூட அதிகரித்துள்ளமை கவலைக்குரிய விடயம் என்று தெரிவித்த அவர், பிள்ளைகளை மிகுந்த அவதானித்து கண்காணித்து விழிப்புடன் செயற்படுமாறு பெற்றோரை அறிவுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
2 hours ago
11 May 2025