Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 06 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, 13 பிரதேச செயலகப் பிரிவுகளில், 3,213 குடும்பங்களைச் சேர்ந்த 32,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
6 பிரதேசச் செயலகப் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள 14 நலன்புரி முகாம்களில் 654 குடும்பங்களைச் சேர்ந்த 2,102 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு, சமைத்த, உலர் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இம்மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்துவருகின்றது. இதன் காரணமாக, பல வீதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால், போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
காத்தான்குடி இலங்கைப் போக்குவரத்துச் சபை டிப்போவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை, கடந்த பத்து நாள்களாக முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .