2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மட்டக்களப்பில் கைதிகளுக்கு தொழிற்தகமை சான்றிதழ்கள்

Editorial   / 2017 நவம்பர் 05 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் முதற் தடவையாக தேசிய தொழிற்தகமை தரம்3 பயிற்சியை நிறைவு செய்த 22  கைதிகள், தேசிய தொழிற்தகமை சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.

இந்த வைபவம், மட்டக்களப்பு சிறைச்சாலை மண்டபத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் கே.எம்.ஏ.எச்.அக்பர் தலைமையில் இன்று (05) நடைபெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஏ.பிரபா மற்றும் தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.நழீர், அதன் போதனாசிரியர்களான எம்.எம்அஸாம், கே.தாஹீர் உட்பட தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு சிறைச்சாலையின் நலன்புரி உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் எனப் பலர் இதில் கலந்துகொண்டனர்.

புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற இந்து மத விவகார மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் சிறைச்சாலை திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையால் 2013ஆம் ஆண்டு தொடக்கம், இந்த தொழிற் தகமைப் பயிற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள சிறைச்சாலைகளில் முதல் தடவையாக மட்டக்களப்பு சிறைச்சாலையில்இந்த தேசிய தொழிற் தகமை சான்றிதழை 22 கைதிகள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X