Freelancer / 2022 ஒக்டோபர் 13 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
புதுகுடியிருப்பு, சிறுவர் இல்லம் முன்பாகவுள்ள வளைவு பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாகச்சென்று வாகனமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குறித்த மோட்டார் சைக்கிளை மோதிய வாகனம் தப்பிச் சென்றுள்ள அதேவேளை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லையென்பதுடன் அதிகவேகத்துடன் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 18வயதுடைய சிறுவர்கள் எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். (R)


4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago