2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் விபத்து; 4 பேர் படுகாயம்

Freelancer   / 2023 ஜூலை 15 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது… 

கம்பஹாவிலிருந்து காத்தான்குடி  நூதனசாலையை பார்வையிடுவதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காரில் பயணித்துள்ளனர். இந்நிலையில் திடீரென குறுக்கீடு செய்து வீதியைக் கடக்க முயன்ற மோட்டார் வண்டியில் மோதுவதைத் தவிர்ப்பதற்கு முற்பட்டவேளை கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளது.

இந்நிலையில் குறித்த கார் எதிரே துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மீது மோதியுள்ளது. இதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உட்பட காரில் பயணித்தவர்களும் அடங்கலாக 4 பேர் பலத்த காயங்களுக்குட்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுள்ளனர்.  இதில் துவிச்சக்கர வண்டி காருக்குக் கீழ் அக்கட்டு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், காருக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .