Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 15 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு அமைச்சினூடாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலான முன்னேற்ற மீளாய்வு கூட்டம், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று (14) நடைபெற்றது.
குறித்த அமைச்சின் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹரிசத டி சில்வா மற்றும் மட்டகளப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தலைமையிலான 14 பிரதேச செயலாளர் பிரிவுகளின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு அமைச்சினூடாக மட்டகளப்பு மாவட்டத்தில் மூன்று விதமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், பயறு, உழுந்து, இஞ்சி போன்ற பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் பயனாளிகளை ஊக்குவித்தல், வீட்டு விலங்கின வளர்ப்பு வேலைத்திட்டத்தில் ஆடு மற்றும் கோழி பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுத்தல் மற்றும் அமைச்சினூடாக சேதன பசளை உற்பத்தி வேலைத்திட்டத்துக்கு இயந்திரங்கள் மற்றும் பயிற்சி பெற்றுக்கொடுத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் மேற்படி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
2 hours ago
11 May 2025