2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு – திருகோணமலை பயணிகளின் அவதானத்துக்கு

பொன் ஆனந்தம்   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிரசித்திபெற்ற வெருகலம்பதி முருகனாலயம், வெள்ள நீரில் அகப்பட்டுள்ளதாக, பிரதேச செயலாளர் க.குணநாதன் தெரிவித்தார்.

அலயத்துக்கும் மாவடிச்சேனைக்குமிடையில் உள்ள நெடுஞ்சாலையை ஊடறுத்து ஓர் அடி உயரத்தில் வெள்ள நீர்பாய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, மட்டக்களப்பு - திருகோணமலைக்கிடையில் பயணத்தை மேற்கொள்ளும் வாகனங்கள், பயணிகள் அவதானத்துடன் செல்லுமாறு,  அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மகாவலி கிளைகளில் ஒன்றான வெருகல் கங்கையின் வெள்ளப்பெருக்கு காரணமாக, இந்நிலமை ஏற்பட்டுள்ளது.

மாவடிச்சேனையில் பாயும் வெள்ள நிலமையால், கங்கையைச்சூழவிருந்த விவசாயிகள் இடம்பெயர்ந்து மாவடிச்சேனைப் பாடசாலையில் தங்கியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X