Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்), இரண்டு மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது.
38 உறுப்பினர்கள் கொண்ட மட்டக்களப்பு மாநகர சபையில் 20 உறுப்பினர்கள் நிதியறிக்கைக்கு ஆதரவாகவும் 18 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
மட்டக்களப்பு மாநகர சபையின் விசேட அமர்வு, மேயர் தி.சரவணபவன் தலைமையில் இன்று (15) காலை ஆரம்பமானது.
கடந்த அமர்வில் முன்வைக்கப்பட்ட நிதியறிக்கையில் உறுப்பினர்கள் பல திருத்தங்கள் முன்வைத்ததன் காரணமாக, அந்தத் திருத்தங்களும் உள்வாங்கப்பட்டு மீண்டும் நிதியறிக்கை முன்வைக்கப்பட்டமைக்கு அமைய, அதற்கு ஆதரவு வழங்குமாறு மாநகர மேயரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து திறந்த வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலா இரண்டு உறுப்பினர்கள் என 20 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
நிதியறிக்கைக்கு எதிராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஐந்து உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரு உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இரு உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரு உறுப்பினர்களும் ஈபிடிபி ஓர் உறுப்பினரும் சுயேட்சை குழுக்களின் மூன்று உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இதேவேளை, இச்சபை அமர்வுகள் நிறைவுபெற்று உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில், சபைக்கு வெளியே உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அங்கு குழப்ப நிலையேற்படுத்தியது.
நேற்றை அமர்வை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.சாணக்கியன் ஆகியோர் பார்வையாளராக கலந்துகொண்டு, அவதானித்தமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
34 minute ago
1 hours ago