2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரிக்கு தொற்று

Kogilavani   / 2021 பெப்ரவரி 19 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் உதவி  பொறுப்பதிகாரிக்கு, கொரோனா வைரஸ் தொற்று, இன்று (19) உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி அதிகாரி சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றபோதே, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஏனைய பொலிஸாருக்கு பிசிஆர், அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .