Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முஸ்லிம் பெண்ணொருவர் போட்டியிடுகின்றார்.
மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாயைச் சேர்ந்த மீராசாகிப் ஆயிஷா உம்மா என்பவரே, ஐக்கிய தேசியக் கட்சியில் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள 16ஆம் வட்டாரத்தைப் பிரதி நிதித்துவப்படுத்திப் போட்டியிடுகின்றார்.
இவருக்கான வேட்பு மனுப்பத்திரம், ஐக்கிய தேசியக் கட்சியால் நேற்று (20) தாக்கல் செய்யப்பட்டது.
பெண்களின் வாழ்வாதாரம், கணவனை இழந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வதாரம், பின் தங்கியுள்ள தனது கிராமத்தின் வீதி அபிவிருத்தி போன்றவைகளை இலக்காக கொண்டு, இத்தேர்தலில் போட்டியிடுவதுடன், பெண்களுக்கான குரலாகத் தான் செயற்படுவேன் என, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மீராசாகிப் ஆயிஷா உம்மா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .