2025 மே 02, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 71 மாடுகளுக்கு அம்மை

Editorial   / 2023 ஜூன் 09 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

நாடு முழுவதிலும் மாடுகளுக்கு பரவி வரும் நோயானது மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரவியுள்ளது.இதுவரை 71 மாடுகளுக்கு இந்நோய் பரவியுள்ளது என்று தெரிவித்த கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் டாக்டர்  திருமதி உதயராணி குகேந்திரன் ஆனால் இறப்பு ஏற்படவில்லை என்றார்.

செங்கலடி கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேச செயலகப்பிரிவுகளில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை இல்லாதொழிக்க எமது திணைக்களத்தினால் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாட்டிறைச்சியினை பொதுமக்கள் உணவாக உட்கொள்வது தொடர்பாக அந்தந்த உள்ளுராட்சி சபை பிரிவுகளிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்களே தீர்மானிப்பர்.அறுவைக்கு கொண்டுவரப்படும் மாடுகள் பரிசோதனை செய்யப்பட்டு நோய் பரவாத மாடுகள் என சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினால் இறைச்சிக்காக பயன்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X