2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் காற்று

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 நவம்பர் 29 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் கடுமையான காற்று வீசிவருகிறது. இதனால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

பேரிரைச்சலுடன் கூடிய காற்று காரணமாக சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. ஓலைகளால் வேயப்பட்ட பல குடிசைகளின் கூரைகளை காற்று சேதப்படுத்தியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

கடுமையான காற்றுடன் கடல் கொந்தளிப்பும் மிகவும் கடுமையாக காணப்படுகின்றது.கடல் கொந்தளிப்பினால் மீன்பிடி நடவடிக்கைககள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. கடற்பிரதேசங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

தொடர்ந்தும் கடுமையான காற்று வீசி வருகின்றது.

இது தொடர்பாக மாவட்ட வானிலை அவதான நிலைய அதிகாரி எஸ்.சிவதாசன் கருத்து வெளியிடுகையில், “இக்காற்று 50 முதல் 75 கிலோமீற்றர் வேகத்தில் வீசுகிறது. தொடர்ந்தும் சில தினங்களுக்கு இக்காற்று தொடரும். வழமையான காற்றைவிட வேகம் கூடியதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X