Editorial / 2019 ஜூன் 15 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் அருட்திரு மல்கம் ரஞ்சித் ஆண்டகை, மட்டக்களப்புக்கு இன்று விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையைச் சந்தித்து கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்துக்கு விஜயம் செய்த பேராயர், அங்கு புனரமைக்கப்பட்டு வரும் ஆலயத்தையும் பார்வையிட்டார்.
இதன்போது, குறித்த தேவாலய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனைகளிலும் பேராயர் ஈடுபட்டார்.
இந்த விஜயத்தின்போது, இராணுவ அதிகாரிகள், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை உட்பட பலர் இணைந்திருந்தனர்.

8 minute ago
19 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
28 minute ago