2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மட்டு.சிறைச்சாலை ஊழியர்களுக்கு அத்தியவாசிய நிவாரணப் பொருள்கள் கையளிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான் 

கொரோனா பரவலைத்  டுக்கும் முகமாக அரசாங்கம் பிறப்பித்துள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு, சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தின் வழிகாட்டலில், நிவாரணப் பொருள்;கள், இன்று(2) விநியோகிக்கப்பட்டன.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜேசேகர  தலைமையில் நடைபெற்ற நிவாரணப் பொருள்கள் வழங்கும் வைபவத்தில், சிறைச்சாலை பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

உலருணவுப் பொருள்கள், மரக்கறிப் பொதிகள், சுகாதாரத்தைப் பேணும் பொருள்கள், கைகழுவும் திரவம், சவர்க்காரம் உட்பட பல பொருள்கள் இவ்வாறு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .