Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 20 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதிய எல்லை வீதியில் போதைப் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆரையம்பதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் ஒருவரை 2 கிராம் 170 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளுடன் சனிக்கிழமை (19) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து கடந்த புதன்கிழமை சீலாமுனை பகுதியில் வைத்து தலா 210, 140 மற்றும்180 மில்லி;கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 3 இளைஞர்களை கைது செய்தனர்.
அவர்கள் 7 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றத்தில் அனுமதியை பெற்று அவர்களிடம் மேற் கொண்ட விசாரணையில் குறித்த போதை பொருள் வியாபாரி தொடர்பாக தகவல்களை வழங்கினர்.
இதையடுத்து பொலிஸ் போதை தடுப்பு ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மாறுவேடத்தில் புதிய எல்லை வீதியில் சம்பவ தினமான சனிக்கிழமை (20) இரவு கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு வியாபாரத்துக்காக ஐஸ் போதை பொருளை எடுத்து வந்த இளைஞனை கண்ட பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்த வியாபாரியிடம் இருந்து 2 கிராம் 100 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். .
8 minute ago
20 minute ago
22 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
22 minute ago
22 minute ago