2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 24 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புத்தம்புரி வாவியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை  இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளதுடன், ஐந்து உழவு இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இரண்டு பேர் பியோடியுள்ளதாகவும் அவர்களைத் தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த வாவியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து விற்பனைக்கு  எடுத்துச் செல்லப்படுகின்றமை தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்று பதுங்கியிருந்து மணல் அகழ்வில் ஈடுபட்ட இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
 
வாவிக்குள் உழவு இயந்திரங்களை இறக்கி மணல் அகழ்வதன் காரணமாக வாவியில் பெருங்குழிகள் ஏற்படுவதாகவும்  மணல் அரிப்பு ஏற்படுவதாகவும் பொதுமக்கள்  தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X