2025 மே 19, திங்கட்கிழமை

மணல் அகழ்வு: எண்மர் கைது

Editorial   / 2018 ஜனவரி 23 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரணவணன் கனகராசா, பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு உழவு இயந்திரங்கள் மணல்ஏற்றப்பட்ட இழுவைப்பெட்டிகளுடன் கைப்பற்றப்பட்டதுடன், எட்டு சாரதிகளும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் இவர்களிடம் காணப்பட்டபோதிலும் சட்டத்துக்கு முரணாக ஆற்றின் உட்பகுதியில் மணல் அகழ்ந்த குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் கூறினர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, மட்டக்களப்புத் தலைமையக பொலிஸ்  குழுவினர், முந்தன்குமாரவெளி ஆற்றுக்குள்  மணல் அகழ்வில் ஈடுபட்பட  ஆறு உழவு இயந்திரங்களைக் கைப்பற்றியதுடன், சாரதிகளையும் கைதுசெய்து, கரடியனாறு பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில்  தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகள் எட்டு பேரும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கபட்டுள்ளனர்.

இவர்கள், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் நாளை (24)  ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X