2025 ஜூலை 19, சனிக்கிழமை

மணல் ஏற்றுவதற்கு புதிய அனுமதி

Editorial   / 2020 மே 13 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், வ.சக்தி, எஸ்.சபேசன்

மட்டக்களப்பில் கட்டுமாண மணல் ஏற்றுவதற்கு  புதிய அனுமதிப்பத்திரம், இம்மாதம் 11ஆம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக, புவி சரிதவியல் கனியவளத் திணைக்கள பிராந்திய பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பாரிஸ் தெரிவித்தார்.

அனுமதிப்பத்திர உரிமையாளர்களின் அசௌகரியங்களைத் தவிர்க்கும் முகமாக, இந்தப் புதிய நடைமுறை புவி சரிதவியல் கனியவளத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதைத் தொடர்ந்தும் கடைப்பிடிப்பதற்கான சகலவித நடவடிக்கைகளும் மாவட்டக் காரியாலயத்தினுடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், புதிய சுற்றுநிரூபத்தினுடாக புதிய சட்டத்தினுடாக வாகனங்களின் இலக்கங்களை மணல் அனுமதிப்பத்திர உரிமையாளரே அனுமதிப் பத்திரத்தில் இடமுடியும் எனவும், மணல் ஏற்றிச் செல்வதற்கான வீதியை, அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் தீர்மானிக்கலாம் எனவும் வழங்கப்படவுள்ள கீயூப்களை வார நாள்களுக்குள் எப்படியாவது ஏற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X