Princiya Dixci / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொது இடங்களில் மது அருந்திய 10 பேருக்கு 64 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதிபதி எம்.கணேசராஜாவினால், திங்கட்கிழமை இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நான்கு பேருக்கு தலா ஏழாயிரம் ரூபாய் வீதமும் மூன்று பேருக்கு ஆறாயிரம் ரூபாயும், இருவருக்கு எட்டாயிரம் ரூபாயும், ஒருவருக்கு இரண்டாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் தொடர்ந்தும் மது அருந்தினால் சிறைச்சாலைக்கு செல்ல நேரிடும் எனவும நீதிவானால்; எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago