Kogilavani / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அம்பாறை மாவட்டத்திலுள்ள 10 மத்தியஸ்த சபைகளில் மத்தியஸ்தர்களாகப்பணியாற்றுவதற்கு 736 பேர் விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்த மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியத்துக்கான பயிற்சி அலுவலர் முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் ஆஸாத், மத்தியஸ்தர்களாகப் பணியாற்றுவதில் பெண்களும் அதிகளவில் ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகரம், உஹன, இறக்காமம், சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலயடிவேம்பு மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் இயங்கிவந்த மத்தியஸ்த சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால், புதிய மத்தியஸ்த சபைக் குழாம் நியமனத்துக்கான நேர்முகப்பரீட்சைகள் இடம்பெற்று, முடிவுறும் தறுவாயில் உள்ளன.
"இதில், பொத்துவில் மத்தியஸ்த சபைக்கான இறுதி நேர்முகப் பரீட்சை, செவ்வாய்க்கிழமை (21) இடம்பெறவுள்ளது.
"எல்லா மத்தியஸ்த சபைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் 30 சதவீதமாக இருக்கும் வகையில், பெண் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
"நேர்முகப் பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளவர்கள், 5 நாட்கள் கொண்ட உட்களப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் எழுத்துமூல தேர்வில் சித்தியடைபவர்கள், மத்தியஸ்தர்களாக நியமிக்கப்படுவர்” என்று குறிப்பிட்டா்ர.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago