Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 21 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
“மதுபானசாலைகளை ஒழிக்க வேண்டுமென்று பகிரங்கமாகக் கூறும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் திறைமறைவில் அதற்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மட்டக்களப்பில் நேற்று நடத்திய போதைப் பொருள் ஒழிப்பு பேரணியின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதலான பணம் போதைப்பொருள் மற்றும் மதுபாவனைக்காக செலவு செய்யப்படுகின்றது. இதற்காக, மாதமொன்றுக்கு 400 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படுகின்றது. போதைப்பொருள் மற்றும் மதுபாவணையில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.
“அதேபோன்று, 20 மதுபான சாலைகள் இருக்க வேண்டிய இம்மாவட்டத்தில் 67 மதுபானசாலைகள் காணப்படுகின்றன. சுற்றுலா விடுதிகள் அனைத்திலும் மதுபானசாலைகள் உள்ளன” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago