Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுர மரக்குற்றிகளை விசேட அதிரப்படையினரின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்ட வனப்பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனரென, திணைக்களத்தின் மாவட்ட அதிகாரி எம்.ஜாயா தெரிவித்தார்.
நேற்று (12) கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படை யில் இம்மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கைதானவர்களை, கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள் சகிதம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக, திணைக்களத்தின் மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago