Suganthini Ratnam / 2016 ஜூன் 03 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரம் ஒன்றில் மரக்குற்றிகளைக் கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் அதன் சாரதியை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைதுசெய்ததுடன், அம்மரக்குற்றிகளுடன் உழவு இயந்திரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மரக்குற்றிகளுடன் உழவு இயந்திரம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மாவடிஓடை காட்டுப்பகுதியிலிருந்து இம்மரக்குற்றிகள் எடுத்துச் செல்லப்பட்டபோது கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காட்டில் மரங்கள் வெட்டப்படுகின்றமை தொடர்பாக தமக்குக் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த காட்டுப்பகுதிக்கு பொலிஸ் குழுவினர் சென்று மறைந்திருந்து மரக்குற்றிகளுடன் சென்ற உழவு இயந்திரத்தை கைப்பறியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மரக்குற்றிகளின் பெறுமதியை மதிப்பீடு செய்வதற்காக வன இலாகா அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
46 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
4 hours ago