2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மரண வீட்டுக்கு உணவு எடுத்துச் சென்றவர் மரணம்

Freelancer   / 2023 மார்ச் 10 , பி.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு உணவு எடுத்துச் சென்ற போதே குறித்த நபர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற போது  படி ரக வாகனம் மோதியதிலே அந்நபர் மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர் வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய முருகன் எனும் தங்க நகை ஒட்டும் வியாபாரியாவார்.

விபத்தில் மரணமடைந்தவரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், படிரக சாரதியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .