Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 15 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
“தடுப்பு மருந்து ஏற்றாது உரிய பராமரிப்பு இல்லாமல் திறந்த பண்ணையில் வளர்க்கப்படும் மாடுகளே, உன்னிச்சைப் பிரசேத்தில் ஒருவகை நோயால் இறந்துள்ளன. இது முற்றுமுழுதாக பண்ணையாளர்களின் கவனயீனத்தால்தான் ஏற்பட்டது” என மண்முனை மேற்குப் பிரதேச கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ப.விநோதன் தெரிவித்தார்.
அண்மையில் உன்னிச்சைப் பிரதேசத்தில் ஒருவித நோயால் பிரதேச மாடுகள் இறந்தமைக்கு மண்முனை மேற்குப் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயமும், கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கமும் எதுவித கவனமும் எடுக்காமையே காரணம் என, கால்நடை வளர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இதற்கு பதலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறிய
'மண்முனை மேற்குப் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயமும் எமது சங்கமும் எமது பண்ணையாளர்களின் கால்நடைகள் தொடர்பில் உரிய கவனம் எடுத்துக் கொண்டுதான் வருகின்றோம். குறிப்பிட்ட ஒரு சிலரின் ஒத்துழைப்பின்மையால் அவர்களது கால்நடைகளுக்கு ஏதும் ஏற்பட்டால் அதற்கு நாம் எவ்வாறு பொறுப்புக் கூற முடியும்.
'தடுப்பு மருந்து ஏற்றாது உரிய பராமரிப்பு இல்லாமல் திறந்த பண்ணையில் வளர்க்கப்படும் மாடுகளே உன்னிச்சைப் பிரசேத்தில் ஒரு வகை நோயினால் இறந்துள்ளன. இது முற்றுமுழுதாக பண்ணையாளர்களின் கவனயீனத்தால்தான் ஏற்பட்டது.
அவர்கள் கால்நடை வைத்திய அதிகாரிகளுக்கோ கால்நடை வளர்ப்போர் சங்கத்திற்கோ உரிய ஒத்துழைப்புகளும் வழங்குவதில்லை. ஆனால் தற்போது மாடுகள் இறந்தமைக்கு கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகமும் எமது சங்கமும்தான் காரணம் என்ற வகையில் கருத்துத் தெரிவிப்பதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.
நோய் ஏற்பட்டு இறந்த மாடுகளை அவர்கள் புதைக்காமல் விட்டமையினாலேயே ஏனைய மாடுகளுக்கும் இந்தத் தொற்று ஏற்பட்டு மரணிக்க நேரிட்டது.
இருப்பினும் தற்போதைய நிலையில் மிகவும் சிரமத்தின் மத்தியில் இப்பிரச்சினை தொடர்பில் கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயமும் எமது சங்கமும் உரிய கவனம் செலுத்தி இந் நோயினை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றோம்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான நிலைமை ஏற்படாமல் இருப்பதற்கு, பண்ணையாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .