2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் மும்முரம்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், வி.ரி.சகாதேவராஜா, எம் எஸ் எம் நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் உள்ள உயர்தர பாடசாலை மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள், இன்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாடசாலை மாணவர்களாகிய 16, 17, 18 மற்றும் 19 வயதுப் பிரிவைக் கொண்ட மாணவர்கள், அருகாமையில் உள்ள பாடசாலைக்கு சென்று பைசர் தடுப்பூசியை பெறலாம்.

“குறித்த பகுதியில் தடுப்பூசி மையம் இல்லையெனில், அருகாமையில் உள்ள மையத்துக்கு சென்று தடுப்பூசியை பெறலாம் . மாணவர்கள் இது விடயத்தில் கவனத்திற்கொண்டு, இத்தடுப்பூசியை பெறுவது சிறந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காத்தான்குடியில் பாடசாலை மாணவர்களுக்கான பைசர்  தடுப்பூசி போடும் நடவடிக்கை, இன்று (21)ஆரம்பிக்கப்பட்டது.

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் கல்வி பொதுத் தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு.எல். நசிர்தீன் மேற்பார்வையில் தடுப்பூசி ஏற்றப்பட்டதுடன், இதன்போது பாடசாலை மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன், வருகை தந்து தடுப்பூசியை ஏற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .