வா.கிருஸ்ணா / 2017 நவம்பர் 16 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட்டக்களப்பு, மயிலம்பாவெளி பாடசாலை மாணவர்களுக்கான பற்சிகிச்சை மருத்துவ முகாம், இன்று (16) காலை பாடசாலையில் நடைபெற்றது.
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பாடசாலை பற்சிகிச்சையாளர் பிரிவும் இணைந்து, செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகுற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பற்சிகிச்சை மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகின்றன
இதன் கீழ், மட்டக்களப்பு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்கள் மற்றும் மயிலம்பாவெளி பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான பற்சிகிச்சை மருத்துவ முகாம் மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் கே .சிறிதரன் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது .
மாணவர்களின் பற்கள் தொடர்பாக பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக, மாணவர்களுக்கு பற்கள் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவற்றுக்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
இந்த மருத்துவ முகாமில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர்களான திருமதி. கே .கிஷாந்தி, வைத்தியர் மெலோரின், வைத்தியர் துசித்தா, வைத்தியர் முபிஸ், பாடசாலை பற்சிகிச்சை பிரிவு பற்சிகிச்சையாளர் எ எம் எப் . சப்ரீன், பொதுசுகாதரா பரிசோதகர் மொகமட் பைரூஸ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

58 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
3 hours ago