2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மாவட்டங்கள் தோறும் வைத்தியசாலைகள்

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 11 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், கனகராசா சரவணன்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிகளுடன் கூடியதாக கிழக்கு மாகாணத்தில் மாவட்டங்கள் தோறும் தலா ஒரு வைத்தியசாலைகளைத் தயார்படுத்துமாறு, சுகாதார அமைச்சு பணித்துள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன் தெரிவித்தார்.

மாவட்டங்கள் தோறும் தலா ஒரு வைத்தியசாலையை கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் திட்டத்துக்கு அமையவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த வகையில், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை - கல்முனை சுகாதார பிராந்தியங்களில் உள்ள வைத்தியசாலைகள், கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நிலையங்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் தீவிரமடைந்தால் தேவைக்கேற்ப இன்னும் பல வைத்தியசாலைகளை கொரோனா வைரஸ் சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றியமைக்க, சுகாதார அமைச்சு முடிவுசெய்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .