Princiya Dixci / 2020 நவம்பர் 26 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவு கூருவதைத் தடுக்கும் வகையில் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் பெறப்பட்ட தடையுத்தரவை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், தடையை உறுதிப்படுத்தியது.
மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றி நினைவு கூருவதைத் தடுக்கும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டளை, கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் இம்மாதம் 20ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்தினின் வீட்டுக்குச் சென்று வழங்கப்பட்டிருந்தது.
இந்தத் தடையுத்தரவை நீக்கக் கோரி, கடந்த 24ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, மேற்படி நிகழ்வு, விடுதலைப் புலிகளை மீள உருவாக்க மேற்கொள்ளப்படும் செயற்பாடு என கொக்கட்டிச்சோலை பொலிஸார் வாதங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில், வழக்கினை நேற்று வரையில் ஒத்திவைத்திருந்த நிலையில், மீண்டும் வழக்கு, இன்று (26) எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், நீதிபதி ஏ.சி.றிஸ்வானால் ஏழு பக்கங்கள் கொண்ட தீர்ப்பு அறிக்கை வாசிக்கப்பட்டதை தொடர்ந்து, தடையுத்தரவை நீக்குவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago