2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கி இருவர் பலி; ஒருவர் படுகாயம்

Freelancer   / 2023 ஜூன் 14 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு - அமிர்தகழி பிரதேசத்தில் வீடு ஒன்றின் மேல்மாடி கூரையை திருத்தும்  வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தச்சு தொழிலாள்கள் மீது மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று(14) பகல் 11 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருதயபுரத்தைச் சேர்ந்த  36 வயது மற்றும் 25 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர் .

இது பற்றி தெரியவருவதாவது

அமிர்தகழி பாடசாலை வீதியிலுள்ள மேல்மாடி வீட்டின் ஒருபகுதில் சம்பவ தினமான இன்று காலையில் 3  தச்சு தொழிலாளிகள் கூரையை கழற்றி திருத்த வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது பகல் 11 மணியளவில் கூரையின் இருந்த தகரம் கழன்று வீதியில் இருந்து வீட்டிற்கு வரும்  மின்சார வயரினை வெட்டியதையடுத்து தொழிலாளர்கள் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

இதில் இருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

இதனையடுத்து 1919 அவசர அம்புலன் சேவைக்கு  தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் சென்று பரிசோதித்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து காயமடைந்த 25 வயதுடைய இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

இதேவேளை உயிரிழந்த இருவரையம் முச்சக்கரவண்டி ஒன்றி வீட்டின் உரிமையாளர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X